காவிக் கூட்டமும் சனாதான துர்நாற்றமும் பிரிக்க முடியாத ஒன்று மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவித் தலைவர்கள். சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த பா.ஜ.க வின் தேசிய செயற்குழு ( ஜெய்ப்பூரில் நடப்பதாக இருந்த அந்த செயற்குழுக் கூட்டம், குஜ்ஜர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிப்பதாக வாக்குறுதியளித்து ராஜஸ்தானத்தின் முதலமைச்சரான முன்னாள் இளவரசி வசுந்தரா ராஜே அம்மையார் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் அல்வா கொடுத்தையடுத்து குஜ்ஜர் இனத்தவர் போராட்டத்தில் இறங்கிய காரணத்தினால் டெல்லிக்கு மாற்றப்பட்டது தனிக்கதை) கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜஸ்வந்த் சிங், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றிப் பெற்றிருப்பது குறித்த தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டார்.
நேபாளத் தேர்தலும், தேர்தல் முடிவுகளும் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். மேலும் சர்வதேசக் குழுக்களின் கண்காணிப்புடன் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைப்பெற்றதை பத்திரிக்கைச் செய்திகள் உறுதிச் செய்கின்றன. இத்தேர்தலில் மாவோயிஸ்டுகள் 220 இடங்களில் வெற்றிப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கமே நேபாள தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவிப்பது அநாகரீகமானது. இந்நிலையில் இந்தியாவில் அதிகாரத்தில் இல்லாத பா.ஜ.க என்கிற அமைப்பு அதிருப்தி தெரிவித்திருப்பது அருவருக்க தக்கது. 250 ஆண்டுகளாக நேபாளத்தில் நடைப்பெற்று வந்த மன்னராட்சி முடிவிற்கு வந்து மக்களாட்சி மலர்ந்திருப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய எந்த ஒரு அமைப்பிற்கும் அதிருப்தி அளிக்கக் கூடிய நிகழ்வு அல்ல. ஆனால் காவிக் கூட்டத்திற்கு சனாதானத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை ஜனநாயகத்தின் மீது கிடையாதே.
சில ஆண்டுகளுக்கு முன் காத்மாண்டுவில் நடைபெற்ற இந்து அமைப்புகளின் மாநாட்டில் உரையாற்றிய விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் " நமது இந்து சாம்ராட்டை (நேபாள மன்னர் கியாநேந்திரா) காப்பது உலகில் உள்ள 90 கோடி இந்துக்களிள் கடமை, இந்து மதத்தை காப்பதற்காகவே கடவுள் அவரை படைத்திருக்கிறார்" என்று முழங்கினார். மேலும் உலக இந்துக்கள் அனைவரும் நேபாள மன்னர் தலைமையில் நியூயார்க் நகரில் ஒன்றுக் கூடி உலகிற்கு இந்து மதத்தின் பலத்தைக் காட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தார் (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 23, 2004).
இதே கருத்தை ஒரு இந்திய முஸ்லிம் தலைவர் சவுதி அரசர் அப்துல்லாவைப் பற்றிக் கூறியிருந்தாலோ அல்லது ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிக் கூறியிருந்தாலோ என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்படி வெளிப்படையாக அந்நிய நாட்டு மன்னனுக்கு பல்லாக்கு தூக்கும் இவர்கள் சிறுபான்மையின மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை " அவர்கள் வாழ்வது மட்டும்தான் இந்தியாவில், ஆனால் அவர்களது விசுவாசம் வேறு இடத்தில் இருக்கிறது" என்று தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்கள் போல முழங்குவதுதான் நகைமுரண்.
Monday, June 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//இப்படி வெளிப்படையாக அந்நிய நாட்டு மன்னனுக்கு பல்லாக்கு தூக்கும் இவர்கள் சிறுபான்மையின மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை " அவர்கள் வாழ்வது மட்டும்தான் இந்தியாவில், ஆனால் அவர்களது விசுவாசம் வேறு இடத்தில் இருக்கிறது" என்று தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்கள் போல முழங்குவதுதான் நகைமுரண். //
சவுக்கடி!
Good Article....
லெமூரியன் & அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
uraiyurkara,
(இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 23, 2004).
he said 2004.so why did u write that issue now?
by
thanjaitamilan.
வருகைக்கு நன்று பாருக்,
ஜஸ்வந்த் சிங் சென்ற மாதம் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வென்றிருப்பது ஆபத்தான் ஒன்று என்று சொன்னதும், அசோக் சிங்கால் 2004 ல் வீரமுழக்கமிட்டதும் நேபாள மன்னனிடம் உள்ள விசுவாசம் தான் காரணம்.
ஜஸ்வந்த் சிங் மட்டும் அல்ல மொத்த அரை டவுசர் கூட்டமும் நேபாளத்தில் மக்களாட்சி உருவானதற்கு மகிழ்ச்சியடைவதை விட, உலகில் ஓன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று இருந்த சனாதான ராஜ்ஜியம் இன்று இல்லையே என்று வயிறெரிவதை காட்டத்தான் அந்த செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
“காவிக் கூட்டமும் சனாதான துர்நாற்றமும் பிரிக்க முடியாத ஒன்று“
நண்பரே...
சனாதன தர்மத்தைக் காக்க காவித் திரிவதுதான் (எங்கட பாஷை அறியுமோ)காவிக்கூட்டமே ஒழிய.. அது இல்லாவிட்டால் அந்த கூட்டமே கிடையாது. அப்புறம் எப்படி பிரிப்பது?
இதுபோன்ற எல்லைத்தாண்டிய தேசபக்தியை எல்லாம் கண்டிக்காதீர்கள். அது அவர்களின் பக்தி. மற்றவர்கள் காட்டினால் துரோகம்.
-அதே பாரத் மாதாக்கீ பச்சா..
Post a Comment